Friday, September 27, 2013

ஹைக்கூ ...


ஹைக்கூ...


நீரின்றி  வேர் 
தொட்டி நீரில் 
சருகுகள்...



காயும் வத்தல் 
காய்கிறாள் 
வேலைகாரப் பெண்...



கழுவியபோது 
நழுவிய விதைகள் 
தக்காளி, கத்தரி...



நிறுத்திய வாகனம்
  நிழலில் பயணம் 
எறும்புகள் ...


உலர்ந்த ஆடை
சேகரிக்கப்பட்டது 
வெயிலில்  பூ ...

உயிரும், மெய்யும் 
கரைகிறது 
சாக்பீஸ்...


  


உறுத்தல்...

உறுத்தல்...



சுவரில் அடிச்ச 
 கொசு-
பார்க்கநேரும்போது 
மனதை உறுத்துகிறது 
வெள்ளையடிக்கும் வரை 
கரும்புள்ளியாய் 
உட்கார்ந்திருக்கிறது 
மனசுக்குள்...






ஞாபகத்தில் நீ...





ஞாபகத்தில் நீ...



ஒவ்வொரு 
மாற்று இரவிலும் 
நினைவில் வந்துபோகிறாய் 
அப்பா-
இணைந்து இருக்கும் 
கொசுவர்த்திச்  சுருளை 
உடையாமல் 
பிரித்ததில்லை நீ...

ஹைக்கு

எறும்பின் பிடியில் 
நிலா வெளிச்சம் 
அவளது நகத்துண்டு...



கங்கை 
யமுனை                                                                  
கள்ளிச் செடி...



பசியில் குழந்தை 
விளம்பரத்தில் 
பிஸ்கட்...



மதில்சுவரில் பதித்த 
கண்ணாடித்துண்டுகள் 
அமர்ந்த பட்டாம்பூச்சி...



மாடியில் 
முறுக்கு, சிப்ஸ் 
குடிசை தொழில்...

ஹைக்கு ...


அத்தனை அழுக்கையும் 
சுத்தம் செய்தது 
வேஸ்ட் துணி...




தொலைவில் மணியோசை 
உருகியபடி மகள் 
ஐஸ் ...



பழுதான தொலைபேசி 
நலம்விசாரிக்கும் மகள் 
பக்கத்தில் நான்...



உழும்போதே 
கிடைத்த உணவு
இறைகொத்தும் பறவைகள் ...



திறந்தபோது 
வெளியேறிய அரணா
கொளுத்தும் வெயில்...





இடதில் நிழல் 
வலதில்  வெயில் 
நடுவில் நான்...

நானும் ... மாவும் ...

நானும் ... மாவும் 



முடிந்தது கவியரங்கம் 
உங்கள் கவிதை 
மிக அற்புதம் 
நல்ல சிந்தனை 
கவிஞர்களின்  நட்பிலிருந்து 
விடைபெற்றேன் 


மாத இதழ் ஆசிரியர் 
கவிஞ்சரே-
வாசித்த கவிதையை 
இந்த மாத இதழில் 
வெளியிடுகிறேன்
 சம்மதம்தானே 
புன்னகையுடன் நன்றி ஐயா 


புறப்படும்முன் 
சில புத்தகங்களையும் 
வாங்கினேன் 


வழி நெடுங்கிலும் 
நிகழ்ச்சியின் நினைவுகள் 


வீடுவந்து சேர்ந்தேன் 
மகளிடம் காண்பித்தேன் 
பொன்னாடைகளையும் 
பரிசுகளையும் 


குறுக்கே புகுந்த 
மனைவி கேட்டால் 
வரும்வழியில்
மாவுவாங்க சொன்னேனே 
எங்கே மாவு?

            **********


 துரை நந்தகுமார் .




 

Thursday, September 26, 2013

புள்ளி வைத்தது

கோலம் இட

புள்ளி மான்...

பசியில் குழந்தை
விளம்பரத்தில்
பிஸ்கட்...



hique

பச்சை
ரத்தம்
மருதாணி...

Monday, September 16, 2013

மரம்





நுனி ஆணியில் 

அமர்ந்த பறவை 

ஓவியத்தில் மரம்.



மூடநம்பிக்கை



பிணத்துடன் உயிர்...



எப்படி?
மாரடைப்பு 
எப்போ?
சனிக்கிழமை 
வயசு?
எழுபத்திரண்டு 


சொந்தம் 
பந்தம் 
நண்பர்கள் 
தெருவாசிகள் 
அறிமுகமான 
பால்காரி 
தபால்காரர் 
கீரை கிழவி 
பழைய பேப்பருக்கு 
பிளாஸ்டிக் சாமான் 

இப்படி ...
கூட்டமாய் 
பலத்தில்-
சில சொல்லி 

ஒப்பாரி
அழுகை

எப்ப எடுக்கிறார்களாம் ?
நாளையா?

புதைப்பா?
எரிப்பா?

எரிப்பா 
எப்போ?
நாளை காலை 
பத்து மணிக்கு 


எல்லாம் தயார் 
நூறு சேர் 
இரண்டு ஷாமியானா 
பத்து டியுப் லைட் 

பூ அலங்காரம் 

தந்தைக்கு 
இளையமகன் 
கொள்ளிக்கு தயார் 

வெட்டியானின் 
பட்டியலை பார்த்தேன் 
மனசு வலித்தது 
.......

சார் 
இது சனிப்பிணம் 
அதனால ஆகாது 
ஒரு கோழி.



Saturday, September 14, 2013

தொழில்








கருப்பு பாலிஷ்

மூன்று வேளை போட்டது

வெள்ளைச்சோறு .


தொழில் 

தெரித்தல்



விரல்பட்டு 

விலகிய நிலா 

குளத்தில்.

வாழ்க்கை




ஆழ்ந்த உறக்கம்
பரப்பிய செங்கல்லில்
சித்தாளின் குழந்தை.



கல்வி




கை நாட்டில் 

சம்பளம் 

பள்ளிக்கூட ஆயா.



சந்திப்பு





கூடிபேசும் 

பறவைகள் 

செல்போன் டவரில்.



ரசனை








அழகாய் நீந்துகிறது 

பிடிக்காதே மீனை 

இப்படிக்கு பசி.


டாட்டா.





இடது, வலதாய் 
அசையும் கவிதை 
மகளின் டாட்டா.

கருப்பு





                             கருப்பு 

                            கருப்புகளானது

                            ஈன்ற குட்டிகள் 

புதிய மெரினா



மழையில் 

மெரினாவான மின்கம்பி 

மைனாக்கள்


கூடு






பொறியியல் கல்லூரி
வெளியே பாடம்
கூடுகட்டும் குருவி.

Thursday, September 5, 2013

நினைகின்றபோது...




காலனியில்லா 
கால்கள் மாதிரி 
மனசு சுடுகின்றது 

தகிக்கின்ற 
கோடைவெயிலில் 
மொட்டை மாடியில் 
காலையில்போட்ட வடத்துக்கும் 
நேற்று -
ரேஷனில் தந்த 
கோதுமை,மிளகாயை 
காயவைக்கும் அம்மா...