Saturday, August 31, 2013

சுகமா, சோகமா?

தாய்மடி

மொட்டைமாடி 

நிலா...




கடந்துச்செல்லட்டும் 

நிறைமாத கர்ப்பிணி 

நின்ற ரோடுரோலர் ...





நீர் வீழ்ச்சி 

மரமெங்கும் பறவைகள் 

காலண்டர் அட்டை ... 

உண்மைகள்

வேருக்கு மட்டுமா 

கிளைக்கும் நீர் 

குளத்தில் மரநிழல்...




மனிதனுடன் மரமும் 

மரணம் 

சவப்பெட்டி...



மிதித் துணியில்  அமர்ந்தது 

வண்ணத்துப் பூச்சி 

மிதித்துணியில்  பூ...



ஒருசாண் வயிறு 

நீண்ட வரிசை 

ரேசன் கடை...



மாநில நாக்குகள் 

பலமுறை பேசியும் 

வராத காவிரி...


குடியிருப்பில் 

வரபோகும் அடுக்ககம் 

கூண்டோடு  கூடு...



மீதமிருக்கும் பால் 

மடியில் 

கசாப்கடையில் ஆடு...

யதார்த்தம்

இங்கு ஊத 

அங்கு அடுப்பெரியும் 

பலூன் வியாபாரி ...




புகைப்படம்  எடுத்துக்கொள் 

உனக்கே கிடைக்காது 

இப்படிப்பட்ட அழகு...


இடது, வலதாய் 

அசையும் கவிதை 

மகளின் டாட்டா...



கண்திறந்த கடவுள் 

மகிழ்ச்சியில் விதவை 

உடைத்த தேங்காயில் பூ....

நீ

கலங்கம் இல்லா

நிலா பார்க்க

நிலா ஆசைப்பட்ட

நிலா முகம் நீ...

__________________________________________________


மழை பொழிகிறது

வெளியே வராதே

ஓவியம் நனைந்துவிட்டால்...

காகம்

தானியமில்லா சோகம் 

சாலை சலியில் 

காகம்... 

மனம்

எரிக்கமனமில்லை 

புதைக்கிறேன் 

பிணமாய் பட்டாம்பூச்சி..



பிழைச்செய்தப்பறவை

தார்சாலையிலா

எச்சம்...


அழிக்கமனமில்லை 

கரும்பலகையில் 

மரங்கள்...  

காடு

காட்டுக்குள் லாரி 

லாரிக்குள் காடு 

வெட்டிய மரங்கள் ...

மழை

மழையை தவிர்க்க

ஆட்டோவில் பயணிக்கும் நீ.....

இடது, வலதைவிட்டு

நடுவில் அமர்திருக்கிறாய் 

ஒரு தூரலைப்போல்.....

ஹைக்கூ



நெய்கலந்த பருப்புசாதம்

கைப்பேசி

சோறுண்ணும் மழலை...


கொசுவின் மரணத்துக்கு

சாம்பலானது

கொசுவர்த்திச் சுருள் ...



கடவுள்


நீண்டநேரம் யோசித்து 
தூங்கிப்போனேன் 
கனவில் கடவுள்...

கடவுள் யார் 
பதில்சொன்னார் 
கடவுள் 

மரம் வெட்டாதவன் 
கடவுள் 
மரம் நடுபவன்
கடவுளின் கடவுள் 

மணல் கடத்தாதவன் 
நெகிழி தவிர்ப்பவன் 
புவி வெப்பம் தடுப்பவன் 

கல்வி கற்று 
கற்று தருபவன் 

சாதி மறந்தவன் 

உடலுறுப்பு தானம் செய்பவன் 
கடவுள் 

குழந்தை பிறந்ததும்
ஆனா? பெண்ணா? கேட்காமல் 
தாய்...சேய் 
நலமா என்பவன் 

மூன்று வயது சிறுமிக்கு 
மாடியில் அழைத்து  
மிட்டாய்  தராதவன் 
கடவுள் 

வரதட்சனை மறுப்பவன் 
விதவை ஏற்பவன்

சிலைக்கு பதில் 
வற்றிய வயிற்றுக்கு 
பால் வார்ப்பவன் 

மனித நேயத்தை மதிப்பவன் 
முக்கியமாய்-
கருவறையிலிருந்து 
என்னை கடத்தாதவன் 
இவர்களே கடவுள் 

கனவிலிருந்த கடவுள் 
கலைந்து  சென்றார்.